ரிசார்ஜ் செய்ய உதவும் இணையதளங்கள்.


பே டிஎம்;ஆன்லைன் மூலமே செல்போனில் ரீசார்ஜ் செய்வதற்கான வசதியை வழங்கும் இணையதளம்.பிரி ரீசார்ஜ் இணையதளமும் இதே வசதியை வழங்குகிறது.

இரண்டு தளங்களுமே ஒரே விதமான சேவையை தான் வழங்குகின்றன.அதாவது செல்போனில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூடவே கேபிள் டிவி மற்றும் இணைய சேவைக்கான (டேட்டா கார்டு)ஆகியவற்றுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஆனால் பேடிஎம் தளம் தோற்றத்தில் மிக எளிமையாக இருக்கிறது.அந்த எளிமை அதன் சேவையில் குழப்பத்திற்கு இடமில்லா தெளிவை வழங்குகிறது.

இந்த தளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முதலில் எதற்கு ரீசார்ஜ் தேவை என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அதாவது செல்போனா,டிடிஎச்சா அல்லது டேட்டா கார்டா என தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு செல்போன் ரீசார்ஜ் என்றால் செல் எண்ணையும் சேசை நிறுவந்த்தையும் குறிப்பிட்டு ரீசார்ஜுக்கான தொகையை குறிப்பிட்டு கிளிக் செய்தால் போதும் ரீசார்ஜ் செய்து விடலாம்.கிரிடிட் கார்டு மூலம் தான்!

இதே போலவே டிடிஎச் மற்றும் டேட்டா கார்டுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

முகப்பு பக்கத்தில் இந்த வசதிக்கான தெளிவான வழிகாட்டுதலை தவிர வேறு எந்த கவன சிதறலும் கிடையாது.

ப்ரி ரீசார்ஜ் தளமும் இதே முறையில் சேவை வழங்கினாலும் முகப்பு பக்கத்திலேயே அது பல்வேறு சலுகை கூப்பன்களை பட்டியலிட்டுருப்பதால் ஒஞ்சம் குழப்பமாக இருக்கிறது.ஆனால் ரீசார்ஜோடு பல்வேறு சலுகை கூப்பன்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது நல்ல போனஸ்.

பேடிஎம் தளமும் சலுகை கூப்பன்களை வழங்குகிரது.அதுவும் எளிமையாகவே.முகப்பு பகத்தில் கண்களை உறுத்தாத வகையில் இதற்கான கட்டம் சின்னதாக மின்னுகிறது.அதில் கிளிக் செய்தால் சலுகை கூப்பன்ங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

1;https://www.paytm.com/index.html

2;http://www.freecharge.in/index.php

————

2 responses to “ரிசார்ஜ் செய்ய உதவும் இணையதளங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக