பிரவுசரில் இருந்தே நீங்கள் செய்யக்கூடியவை!

broஇணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்கும்.அதே போல கணக்கு போட்டு பார்க்க வேண்டும் என்றாலும் சரி ஒரு கிளிக் தான் தேவை. கால்குலேட்டர் வந்து நிற்கும்.

 

கால்குலேட்டரை தனியே கூட தருவிக்க வேண்டாம்.கூகுலில் கணக்கை கூட்டலோ கழித்தலோ டைப் செய்தால் போதும் அதுவே கால்குலேட்டரை வரவைத்து கணக்கு போட்டு காட்டிவிடும்.

 

இப்படி கூகுலை தேடிப்போய் கூட கணக்கு போட வேண்டியதில்லை .உங்கள் பிரவுசரில் இருந்தே கால்குலேட்டரை பயன்படுத்திக்கொள்ளலாம்.பிரவுசரின் முகவரி கட்டத்தில் விடை தெரிய வேண்டிய கணக்கை டைப் செய்தால் நேராக கால்குலேட்டர் சேவை வந்து விடும்.

 

இதற்கு ஒரே தேவை கூகுல் தேடியந்திரத்தை முகப்பு பக்க தேடிய்ந்திரமாக நீங்கள் அமைத்திருக்க வேண்டும்.குரோம் மற்றும் எக்ஸ்பிலோரர் பிரவுசரில் இந்த குறுக்கு வழி செயல்ப‌டும்.நெருப்பு நரி என்றால் அதில் உள்ள கூகுல் தேடல் கட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

 

கூகுல் இல்லாமலே கூட பிரவுச‌ரிலேயே தேடலாம்.பிரவுசரின் முகவரி கட்டத்தில் ஜாவாஸ்கிரிப்ட் என ஆங்கிலத்தில் டைப் செய்து விட்டு தொடர்ந்து கணக்கை டைப் செய்தால் கால்குலேட்டர் வசதி வந்து விடும்.இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் இது செயல்படும் .எவ்வளவு சிக்கலான கணக்காக இருந்தாலும் இதை பயன்படுத்தலாம்.

 

பிரவசரில் இருந்தே செய்யக்கூடிய சின்ன சின்ன மாயங்கள் மேலும் சில இருக்கின்றன‌.

 

ஏதேனும் இணைய பக்கத்தை ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? அதற்கென தனியே எந்த சேவையையும் நாடிச்செல்ல வேண்டாம்.பிரவுசரில் குறிப்பிட்ட இணைய முகவ்ரியை அடிப்பதற்கு முன், ஏவெரி என டைப் செய்து, என்டர் கீயை அடித்தால் போதும் அந்த தளத்தின் ஸ்கிரீன்ஷாட் ரெடி.

 

அதே போல குறிப்பிட்ட இணைய முகவ்ரியை சுருக்க வேண்டுமா? பிரவுசரின் முகவரி கட்டத்தில் முதலில் பிட்.லே என டைப் செய்து விட்டு இணையதள முகவரியை அடித்தால் அது தானாக சுருங்கி போய்விடும்.

 

————
எலலா பிரவுசர்களிலும் செயல்படக்கூடிய எளிய குறுக்குவழிகள்; http://www.howtogeek.com/114518/47-keyboard-shortcuts-that-work-in-all-web-browsers/

5 responses to “பிரவுசரில் இருந்தே நீங்கள் செய்யக்கூடியவை!

  1. அன்பின் சிம்மன் – அரிய தகவல்கள் – பயனுள்ள தகவல்கள் -எங்கிருந்து தேடிப் பிடித்து தகவல பரிமாற்றம் செய்கிறீர்கள் – என்கிருந்து நேரம் கிடைக்கிறது – அனைவருக்கும் தகவல் போய்ச் சேர வேண்டுமென்ற நல்ல எண்ணம் பாராட்டுக்குரியது – நல்வாழ்த்துகள் சிம்மன் – நட்புடன் சீனா

cheena ( சீனா ) -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி