தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்கள்!.

தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மைல்கல்லை முன்னிட்டு அன்மையில் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விக்கிபீடியாவில் பங்களிப்பதற்கான பயிறிசியும் அளிக்கப்பட்டது.
 இந்திய அளவில் தமிழ் விக்கிபீடியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இது நம் கையில் தான். உள்ளது. நாம் அனைவருமே நமக்கு தெரிந்த ஆர்வம் உள்ள விஷய்ங்களை விக்கிபீடியாவில் இடம் பெற வைககலாம்.

தமிழ்விக்கிபீடியா வளர்ச்சி குறித்து சில வாரங்களுக்கு முன் இந்தியா டூடே இதழில் நான் எழுதிய கட்டுரையின் பிடிஎப் நகலை இணைத்துள்ளேன். எனக்கு மிகுந்த மன‌நிறைவை தந்த கட்டுரை இது.

பி.கு; மிகுந்த மனநிறைவுடன் பணியாற்றி வந்த இந்தியா டூடே இதழில் இருந்து சமீபத்தில் விடைபெற்றுள்ளேன். வலைப்பதிவு மற்றும் தொடர்புடைய முயற்சிகளில் தீவிரம் காட்டுவதற்காக இந்தியா டுடேவில் இருந்து விலகி வந்துள்ளேன்.தவிர சைபர் சிம்மன் கையேடு முயற்சிக்கும் கூடுதல் நேரம் தேவைப்படகிறது.

தொழில்நுட்ப மின்னிதழ் அல்லது மின் மடல் துவக்கும் திட்டமும் உள்ளது.

பத்திரிகை நண்பர்கள் சிலருடன் இணைந்து அறிவியல் சார்ந்த புதுமையான் இதழ் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் உள்ளேன்.

இவை பற்றிய விவரங்களை விரைவில் தனியே பதிவிடுகிறேன்.

உங்கள் ஆதரவும் ஆலோசனையும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும்.

அன்புடன் சிம்மன்

———–

 

 

—-

viki

12 responses to “தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்கள்!.

  1. தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளமைக்கு
    மகிழ்ச்சியையும் எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்…..மேலும் அறிய
    பல தமிழ் செய்திகளை சேமித்து வைத்து தமிழுக்கு புகழ் சேர்க்குமாறும்
    வேண்டுகிறேன் மூவை சுந்தர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s