இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/
இந்த இணையதளம் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பழரசம் தயாரித்து (ஜூஸ்) தருகிறது. அதாவது விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு இணையதளங்கள் போல இது பழரச குறிப்பு இணையதளம். ஆனால் பழரச குறிப்புகளை வெறும் பட்டியலாக அடுக்காமல் கொஞ்சம் சுவார்ஸ்யமாக முன்வைக்கிறது; அதனால் தான் சிம்பிளி ஸ்மார்ட் ஜூசிங் என பெயர்!
இந்த தளத்தில் நுழைந்ததும் முதலில் பழரசம் தயாரிக்க கிளிக் செயத்தும் வரிசையாக பழங்கள் தோன்றுகிறது. அந்த பழங்களை வரிசையில் இருந்து உருவி எடுத்து கிழே உள்ள மிக்சரில் போட்டால் பழரசமாக தயார் செய்து தருகிறது.
நீங்கள் தயாரித்த பழரசத்தில் என்ன எல்லாம் இருக்கிறது என்று புள்ளிவிரங்களை தருவது தான் சிறப்பம்சம். அதாவது பழர்சத்தில் எத்தனை கலோரி இருக்கிறது, சர்க்கரை எவ்வளவு என்றெல்லாம் தகவல் அளிக்கிறது. அப்படியே மற்ற பழரசங்களுக்கான தயாரிப்பு குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. அந்த பழரசங்களுக்கான ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதே போல பழங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ற பழங்களையும் தேர்வு செய்து கொள்ளும் வசி இருக்கிறது.
ஆக அடுத்த முறை பழச்சாறு தயாரிக்கும் போது இந்த இணையதளத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
இணையதள முகவரி; http://simplysmarterjuicing.com/
———-
பழங்கள் தொடர்பான் இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம்: https://cybersimman.wordpress.com/2014/09/10/websites-61/
——–
பி.கு; பழங்கள் பற்றி குறிப்பிடும் போத் பட்பிரஸ்ட் இணையதளம் பற்றி நினைவுக்கு வருகிறது. சாமான்யர்களும் தாவிரங்கள் மீது ஆர்வம் கொண்டு தாவிரவியல் ஆய்வில் பங்கேற்க உதவும் இந்த இணையதளம் பற்றிய விளக்கமான அறிமுகம் எனது முதல் நூலான இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது; https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html.
இங்கும் வாங்கலாம்; http://www.dialforbooks.in/reviews/innaiyaththal-innaivom.html