சரத்பாபுவை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள்

sarathbabu1-1தென் சென்னை வேட்பாளாராக சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.படித்தவரான அவர் தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்க்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தை முன்னிறுத்தி அவரை அறிமுகம் செய்ய எண்ணியிருந்தேன்.

ஆனால் சக பதிவரான குளோபன் சரத் பற்றி அருமையாக எழுதியுள்ளார். அந்த இணைப்பை கிழே கொடுத்துள்ளேன்.

சரத் பாபுவாவிற்காக பதிவர்கள் இயன்ற அளவுக்கு பாடுபட வேண்டும் என்னும் அவர் கருத்தை நானும் மனதார ஆத‌ரிக்கிறேன்.

குளோபன் தேர்தல் முடியும் வரை வேறு பதிவுகள் ஈடப்போவதில்லை என கூறியுள்ளார். சரத் பதிவு முதலில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி தெரிவித்துள்ளார். நல்ல முடிவு.

என் பங்கிற்கு முடிந்த வரை சரத்பாபு பற்றிய செய்திகளை இந்த பதிவில் இடம்பெற செய்ய முயற்சிக்கிறேன்.

தேர்தல் தொடர்பான எனது மற்றொரு பதிவான மல்லிகா சரபாயின் இணையதளத்தையையும் படித்து பர்ர்க்கவும்

———-

சரத்பாபுவின் இணையதளம்;

10 responses to “சரத்பாபுவை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள்

  1. நம் நாட்டு அரசியலுக்கு படித்தவர் தேவை இல்லை ஏற்கனவே படித்தவர்கள்தான் அரசியலில் இருத்துகொண்டிருக்கிறார்கள் பண்பாளர்கள் தான் தேவை.நல்ல எண்ணமும் தீங்கில்லாத தெளிவான பண்பும், தர்ம சிந்தனையும். மக்களுக்காக குறைந்த காலமெனும் பொது சேவையில் பணியாற்றி அதனால் ஏற்ப்பட்ட அனுபவம் கொண்டுள்ளவர்கள்தான் தேவை. தமிழனுக்கே உண்டான உணர்ச்சி வயப்படுதலை தவிர்த்து தெளிவாக தெரிந்து அறித்து வெளிப்படுத்துவது நன்று.

  2. இங்கே தமிழன் எங்கிருந்து வந்தான் அவர்களே!
    நாம் மொழி இன பாகுபாடை மறக்காவிடில் நாமும் அரசியல்வாதி அல்லவா?

    சரத்பாபு இந்தியாவின் தலைசிறந்த கல்லூரியில் படித்தவர். மேலும் வாழ்கையில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்.

    உண்மையில் சொல்லவேண்டும் என்றால் சரத்பாபு இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் அர்ஜுன் இருந்ததை போல் மிக தைரியமாக இந்த தேர்தலில் இறங்கி இருக்கிறார்.

    விஜயகாந்த் மீது இருக்கும் மரியாதையை நீங்கள் நண்பர் சரட்பாபுவிற்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.

    நீங்கள் இங்கே (வலை) பூவில் இந்நாட்டை பற்றி அலசுகிறீர்கள். அங்கே அரசியல்வாதிகள் நமக்கு காதில் பூ வைத்து கொண்டிருக்கிறார்கள்.

    நாம் ஒட்டு போடாதது தான் நம் நாட்டின் முன்னேற்றத்தில் மிக பெரிய ஓட்டையை போட்டு கொண்டிருக்கிறது.

    நான் இதை உணர்ச்சி வயப்பட்டு கூறவில்லை. எனக்கும் அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. உங்களை போன்றவர்கள் எங்களை நம்புவதை விட உங்களை நம்புங்கள்.

    சிந்தியுங்கள். தவறிருப்பின் மன்னியுங்கள். சரத்பாபுவின் வெற்றி இந்திய ஜனநாயத்தின் கேலி கூத்தை (கூற்றை) அடியோடு மாற்றும் என நம்புவோம்.

    போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும்.

  3. //நம் நாட்டு அரசியலுக்கு படித்தவர் தேவை இல்லை ஏற்கனவே படித்தவர்கள்தான் அரசியலில் இருத்துகொண்டிருக்கிறார்கள் பண்பாளர்கள் தான் தேவை.நல்ல எண்ணமும் தீங்கில்லாத தெளிவான பண்பும், தர்ம சிந்தனையும். மக்களுக்காக குறைந்த காலமெனும் பொது சேவையில் பணியாற்றி அதனால் ஏற்ப்பட்ட அனுபவம் கொண்டுள்ளவர்கள்தான் தேவை. தமிழனுக்கே உண்டான உணர்ச்சி வயப்படுதலை தவிர்த்து தெளிவாக தெரிந்து அறித்து வெளிப்படுத்துவது நன்று.//

    எங்கெல்லாம் சரத் பற்றிய நேர்மறை பதிவுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று இந்த பாராவை காப்பி பேஸ்ட் செய்வதை அரும்பணியாகக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவின் கருத்துக்கும் ஒரு ஓட்டுப் போடுவோம்.

பின்னூட்டமொன்றை இடுக