பரிசளிக்க அழைக்கும் இணையதளம்

பரிசு பொருட்களை பெருவது மட்டும் அல்ல.பரிசு கொடுப்பதும் கூட மகிழ்ச்சியை தரக்கூடியது தான்.

பரிசுப்பொருட்களை தெரிந்தவர்களுக்கு தான் தரவேண்டும் என்றில்லை.முன் இன் தெரியாதவர்களுக்கு கூட பரிசளித்து மகிழ வைத்து நாமும் மகிழலாம்.

ஆனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளிப்பது எப்படி என்ற தயக்கம் உங்களுக்கு இருந்தால் ,அல்லது யாருக்கு பரிசலிப்பது என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் நுழைந்ததுமே கூகுலின் உலக வரைபடம் தோன்றுகிறது.அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களை கிளிக் செய்தால் அங்கு வசிப்பவரின் முகவரி வருகிறது.அந்த முகவரிக்கு உங்கள் பரிசுப்பொருளை அனுப்பி வைக்கலாம்.
சந்தோழத்தில் மிகப்பெரிய சந்தோஷ‌ம் மற்ற‌வர்களை மகிழ வைத்து பார்ப்பது தான் என்று சொல்வதில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.

புத்தாண்டு நெருங்கும் நிலையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் எத்ந் மூளையிலோ இருக்கும் யாரோ ஒருவரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்த இந்த த‌ளத்தை பயன்படுத்தலாம்.

பரிசு பெறுபவர்கள அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் வழி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இணையதள முகவரி;http://www.giftastranger.net/

1 responses to “பரிசளிக்க அழைக்கும் இணையதளம்

பின்னூட்டமொன்றை இடுக