நினைத்ததை சொல்ல ஒரு இணையதளம்.

நீங்கள் நினைப்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறிர்களா?அப்படியென்றால் எங்களிடம் வாருங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள்;வெளியேறுங்கள் என்று அழைக்கிறது தர்ஸ்டி இணையதளம்.

அடிப்படையில் இந்த தளத்தை இணைய குறிப்பேடு என்று சொல்லலாம்.இணையத்தில் டைப் செய்ய உதவும் வேர்ட்பேட் போன்ற ஒரு அழகான கொஞ்சம் அலங்கரிக்கப்பட்ட குறிப்பேட்டினை கொண்டுள்ள இந்த தளத்தில் மனதில் உள்ளதை டைப் செய்து அவற்றை உட‌னே வெளியிட்டுவிடவும் செய்யலாம்.

இதில் என்ன விஷேசம் என்றால் நீங்கள் யார் என்பதை குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.அதாவது அனேமதையமாக எந்த கருத்தையும் வெளியிடலாம் .

இந்த தளத்தின் எளிமை கவர்கிறது என்றாலும் இதனல் என்ன பயன் என்பது கேள்விக்குறியே.யார் என்பதை வெளிப்படுத்தி கொள்ளாமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடிவதே இந்த தளத்தின் சிறப்பம்சமாக சொல்லப்பட்டாலும் அதைவிட நினைத்தவுடன் கருத்துக்களை பதிவு செய்ய முடிவதே இதன் பலம் என்று தோன்றுகிறது.

பதிவாகும் கருத்துக்களில் குறிப்பிட்ட எந்த த‌லைப்பு பிர‌பலமாக இருக்கின்றனவோ அவை அவப்போது குறிப்பிடப்படுகின்றன.

———–http://www.thrsti.com/

4 responses to “நினைத்ததை சொல்ல ஒரு இணையதளம்.

பின்னூட்டமொன்றை இடுக