போன் செய்தால் புத்தகம் வீடு தேடி வரும்;ஒரு புதுமையான‌ சேவை

பிட்சாவை ஆர்டர் செய்வது போல புத்தகங்களை சுலபமாக வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்?என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்தால் ஒரே போன் காலில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம் தெரியுமா?

டயல் ஏ புக் சேவை இந்த வசதியை வழங்குகிறது.

புத்தகங்களை இணையதளங்கள் மூலம் வாங்கலாம்.ஆங்கிலத்தில் பிலிப்கார்ட் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன என்றால் தமிழிலும் புத்தக விற்பனை தளங்களுக்கு பஞ்சமில்லை.உடுமலை,காந்தளகம்,தமிழ் நூல்,எனி இண்டிய‌ன் புக்ஸ் என பல தளங்கள் இருக்கின்றன.

இருப்பினும் இணையம் மூலம் புத்தகம் வாங்குவது சிலருக்கு பிடிபடாத விஷயமாக இருக்கலாம்.குறிப்பாக இண்டெர்நெட் பரிட்சயம் இல்லாதவர்கள் இணையம் மூலம் புத்த்கம் வாங்குவதை சிக்கலானதாக கருதலாம்.இவ்வளவு ஏன் இண்டெர்நெட்டுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள் கூட இணையம் வழி பணம் செலுத்துவதை ஒரு பிரச்சனையாக கருதலாம்.

அதோடு எப்படியும் புத்தகங்களை வாங்க கூடுதலாக எளிமையான வழி ஒன்று இருந்தால் நன்றாக தானே இருக்கும்.அந்த எண்ணத்துடன் தான் டெல்லியை சேர்ந்த மாயங் டின்க்ரே டயல் ஏன் புக் சேவையை துவக்கியுள்ளார்.

ஒரு புத்தகத்தை வாங்குவது பிட்சாவை ஆர்டர் செய்வது போல எளிமையாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே இந்த சேவையை ஆரம்பித்ததாக டிங்க்ரே சொல்கிறார்.அவரது சேவை அதை தான் செய்கிறது.

எந்த புத்தகம் தேவையோ அந்த புத்தகம் வேண்டும் என்று போன் மூலம் ஆர்டர் செய்தால் போதும் புத்த்கம் வீடு தேடி வந்து சேரும்.டெல்லிக்குள் என்றால் புத்தகத்தை உடனடியாக நேரில் டெலிவரி செய்து விடுகின்றனர்.

மற்ற நகரங்கள் என்றால் கூரியர் மூலம் புத்த‌கம் அனுப்பி வைக்கப்படுகிறது.புத்தகத்தை பெற்று கொள்ளும் போது அதற்குறிய தொகையை தந்தால் போதுமானது.

போனில் மட்டும‌ல்ல;எஸ் எம் எஸ் வாயிலாகவும் புத்தகத்தை ஆர்டர் செய்யலாம்.டயல் ஏ புக் நிறுவனத்தின் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வாயிலாகவும் ஆர்டர் செய்யும் வசதி இருக்கிறது.

குறிப்பிட்ட புத்தக‌ம் தேவை என்னும் போது அதற்காக புத்தக் கடையை தேடி செல்ல சோம்பலாக இருக்கலா.அல்லது நேரம் கிடைக்காமல் போகலாம்.இரண்டும் இல்லை என்றால் புத்தக கடையில் அந்த புத்தகம் கிடைக்காமல் போக்லாம்.இது போன்ற நேரங்களில் டயல் ஏ புக் சேவை நிச்சயம் கை கொடுக்கும்.வீட்டிலிருந்தபடியே போன செய்து புத்தகத்தை தருவித்து கொள்ளலாம்.

அந்த வகையில் புத்தக பிரியர்களுக்கு நிச்சயம் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சேவையை துவக்கியுள்ள டிங்க்ரா அடிப்படையில் ஒரு புத்த‌க பிரியர்.வாசிப்பதில் ஈடுபாடு கொண்ட அவருக்கு புத்த்கம் சார்ந்த சேவையை தொழிலாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கிறது.இந்த எண்ணத்தொடு புத்தக கடைகள் செயல்படும் வித்ததை கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் மளீகை பொருட்கள் மருந்துகள் போன்ற‌வற்றை எப்படி வாங்குகின்றனர் என்றும் கவனித்திருக்கிறார்.இந்த நேரத்தில் தான் புத்தகம் வாங்குவதை மேலும் எளிமையாக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது.கொஞ்சம் யோசித்து டயல் ஏ புக் சேவையை உருவாக்கினார்.

இந்த நிறுவனத்தை துவக்கும் முன் ஸ்லைட் ஷேர் இணைய நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.அதன் பிறகு நண்பர்களோடு சேர்ந்து கிவிப்பி என்னும் இணைய நிறுவனத்தையும் நடத்தியிருக்கிறார்.

இப்போது டயல் ஏ புக் சேவையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்திற்கு என்று தனியே இணையதளம் இல்லை.ஆனால் எளீமையான ஒரு வலைப்பதிவு இருக்கிறது.அந்த வலைப்பதிவில் எழுத்தாளர்களின் நேர்க்கானல் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்.இது தவிர பேஸ்புக் அம்ற்றும் டிவிட்டர் பக்கங்களூம் உள்ளன.

வெறும் புத்தக விற்‌பனையை தாண்டி வாசகளுக்கான கூடுதல் வசதிகளை தருவதே எதிர்கால திட்டம் என்கிறார் டிங்க்ரே.எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களிடையே மேலும் இணக்கமான தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

புத்த்கம் வேண்டுவோர் அழைக்க;9650457457

1 responses to “போன் செய்தால் புத்தகம் வீடு தேடி வரும்;ஒரு புதுமையான‌ சேவை

பின்னூட்டமொன்றை இடுக