நீங்களும் பட்டியல் போடலாம்;அழைக்கும் இணையதளம்.

பட்டியல் போடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படியென்றால் பட்டியல் போடுங்கள்,பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது லிஸ்ட்கீக் இணையதளம்.

லிஸ்ட்கீக் மூலமாக யாரும் தங்கள் விரும்பும் பட்டியலை உருவாக்கி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்களின் பட்டியலை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கலாம்.

பட்டியல் என்றால் எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.நீங்கள் ரசித்து பார்த்த படங்கள்,உங்களுக்கு பிடித்தமான தலைவர்கள்,நீங்கள் சிறந்தது என கருதும் இடங்கள் என எப்படி வேண்டுமனாலும் பட்டியல் அமையலாம்.

இவற்றை தான் பட்டியலிட வேண்டும்,இப்படி தான் பட்டியலிட வேண்டும் என்று எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உறுப்பினர்கள் தங்கள் மனதில் உள்ள எந்த விஷயம் பற்றியும் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம்.

பொதுவாக பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மிகச்சிறந்த பட்டியலை அவப்போது வெளியிடுவது உண்டு .இவற்றில் டாப் டென் பட்டியல் மிகவும் பிரபலம்.இந்த பட்டியல்கள் எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.பல நேரங்களில் இவை பாரபட்சம் மிக்கவையாக இருப்பதாக கருத்தப்படலாம்.எல்லா பட்டியல்களிலுமே விடுபட்டவர்கள் பற்றிய மனக்குறையும் ஏற்படலாம்.சில பட்டியல்கள் சர்ச்சையயும் உண்டாக்கலாம்.

இந்த பட்டியல்கள் பற்றி புலம்புவதை விட நமக்கான பட்டியலை நாமே உருவாக்கி கொண்டால் என்ன?அதை தான் லிஸ்ட் கீக் மிக அழகாக செய்கிறது.

இந்த தளத்தை பயன்படுத்துபவர்கள் தாங்கள் விரும்பும் பட்டிய்லை இங்கே சம்ர்பிக்கலாம்.அதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டியது மட்டுமே. உறுப்பினரான பின் தங்களுக்கான பட்டியலை தயார் செய்து சமர்பிக்கலாம்.

மனதை கவர்ந்த பாடல்கள், இனிமையான ராகங்கள்,ஆகச்சிறந்த பேச்சாளர்கள்,பயன்மிகு கண்டுபிடிப்புகள் என எப்படி வேண்டுமானாலும் உறுப்பினர்களின் பட்டியல் அமையலாம்.செய்ய வேண்டியவை,தவிர்க்க நினைக்கும் விஷயங்கள் பற்றியெல்லாம் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

சரி பட்டியலை உருவாக்கி சமர்பித்தாயிற்று ,இனி என்ன என்று கேட்கலாம்!பட்டியலை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியே நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.அதை பார்த்து விட்டு நண்பர்கள் அவர்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.அதே போல இந்த தளத்தில் உள்ள சக உறுப்பினர்கள் பட்டியலை பார்த்து கருத்து தெரிவிப்பார்கள்.

நீங்களும் கூட மற்ற உறுப்பினர்களின் பட்டியலை பார்வையிடலாம்.கருத்து தெரிவிக்கலாம்.உறுப்பினர்களின் பட்டியலை பார்த்து நீங்களும் அதே போல ஒரு புதிய பட்டியல் தயாரிக்கலாம்.அல்லது எதிர் பட்டியல் போடலாம்.

உறுப்பினர்கள் பட்டியலில் பகிரும் விஷயங்கள் பல நேரங்களில் புதிய புரிதலை ஏற்படுத்தலாம்.நாமும் இப்படி பட்டியல் போடலாமே என யோசிக்க வைக்கலாம்.புதிய உறுப்பினர்களின் பட்டியலை பார்த்து புதுப்புது விஷயங்களாக தெரிந்து கொள்ளலாம்.அந்த அளவுக்கு உறுப்பினர்கள் விதவிதமான பட்டியல்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

உறுப்பினர்கள் பட்டியலும் பட்டியலின் பட்டியலும் தனித்தனியே இடம்பெற்றுள்ளன.இவை தவிர பட்டியலை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருப்பது போல சக உறுப்பினர்களை பின்தொடரும் வசதியும் உண்டு.நீங்களும் மற்றவர்களால் பிந்தொடரப்படலாம்.பட்டியல் சார்ந்த நட்புறவை வளர்த்து கொள்ள இந்த தளம் உதவும்.

இணையதள முகவரி;http://listgeeks.com/#!/

2 responses to “நீங்களும் பட்டியல் போடலாம்;அழைக்கும் இணையதளம்.

பின்னூட்டமொன்றை இடுக