அலுவலக‌த்திலும் பேஸ்புக் பார்க்க…

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?அதிலும் வேலையில் மூழ்கி உடலும் ,மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்!

ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே!பல‌ நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருக்கும் கொடுமைக்கார நிர்வாகங்களாக இருக்கின்ற‌ன என்றால் மற்ற நிறுவனங்களில்லோ பேஸ்புக் பய‌ன்ப‌டுத்துபவரை பார்த்தாலே வேலை செய்யாமல் வெட்டியாக பொழுதை கழிக்கிறாரே என்று நினைப்பவர்கள் தானே அதிக உள்ளனர்.

அது மட்டும் அல்லாமல்,நடுவில் சிறிது நேரம் பேஸ்புக் பார்த்தாலும் யாராவது மேலதிகாரி எட்டிப்பார்த்துவிட்டால் தவறாக் நினைத்து கொள்வாரே என்ற சந்தேகமும் காட்டலாம்.இதனால் ஏதோ திருட்டு தம் அடிப்பது போல அவசரம் அவசரமாக பேஸ்புக் பதிவுகளை படிக்க வேண்டியிருக்கும்.

இத்தகைய அனுபவம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்திலும் அச்சமோ சந்தேகமோ இல்லாமால் பேஸ்புக் பதிவுகளை பார்ப்பதற்கான வழியை ஹார்ட்லி வொர்க் இன் தளம் உண்டாக்கி தருகிறது.

இந்த தளம் பேஸ்புக் பதிவுகளை ஏதோ மிக முக்கியமான புள்ளி விவரங்கள் அடங்கிய எக்செல் கோப்புகளை பார்த்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்த தந்து பேஸ்புக்கில் உலாவ வழி செய்கிறது.

கொஞ்சம் பழைய உத்தி தான் இது. படிக்கிற காலத்தில் பாட புத்தகத்தின் நடுவே கதை புத்தகத்தை மறைத்து வைத்து கொண்டு பாட புத்தகம் படிப்பது போல கதை புத்தகம் படிப்பது உண்டல்லவா?அதே போல தான் இந்த தளம் பேஸ்புக் பதிவுகளை உருவி எக்செல் கோப்பு போல கட்டம் கட்டி தருகிற‌து.யாரவது உங்கள் முதுக்குக்கு பின் இருந்து எட்டிப்பார்த்தால் நீங்கள் எக்செல் கோப்பில் மூழ்கியிருப்பது போல தோன்றும்.நீங்கள் ஜாலியாக நண்பர்கள் பதிவுகளை படித்து கொண்டிருக்கலாம்.

முதல் முறை பார்க்கும் போது உங்களுக்கே கூட கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கும்.பேஸ்புக்கின் வழக்கமான பதிவு வரிசை அதன் நடுவே புகைப்படங்கள் வீடியோக்கள் என்னும் அழகிய தோற்றத்துக்கு பதிலாக கட்டம் கட்டமாக‌ தக‌வல்களை பார்க்கும் போது குழ‌ம்பிவிடும்.ஆனால் கட்டதின் உள்ளே உற்றுபார்த்தால் பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைப்புகளையும் கருத்துக்களையும் தனித்தனியே படிக்க முடியும்.

நண்பர்களை பார்த்தாலே பேஸ்புக்கில் காணவில்லயே என்று கேட்கும் வழக்கம் உள்ள காலகட்டத்தில் அவசியமான சேவை தான்.

நிற்க இதே போன்ற முகமுடி சேவைகள் இன்னும் சில இருக்கின்றன.தொடர்ந்து எழுதுகிறேன்.இதே போல எக்செல் கட்டங்கள் வடிவிலான் இணைய விளையாட்டு பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
———-

http://hardlywork.in/
———]]

https://cybersimman.wordpress.com/2010/03/21/game/

5 responses to “அலுவலக‌த்திலும் பேஸ்புக் பார்க்க…

  1. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் மட்டுமே எந்த ச்மூக தளங்களையும் பாருங்கள்..

    உங்கள் அறிவுத்தேடலால கிடைத்த அறிய விசயத்திற்கு பாராட்டுக்கள்

பின்னூட்டமொன்றை இடுக