கட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதள‌ம்.


நீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களா?அதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் தி ஆர்டிகல் செக்கர் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த நீளமான கட்டுரையையும் இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த கட்டுரை எந்த அளவுக்கு வாசிப்புக்கு உகந்தது என்று இந்த தளம் சீர் தூக்கி பார்த்து சொல்கிறது.அந்த கட்டுரையின் வாசிப்பு தன்மையை சதவீத கணக்கில் மதிப்பீட்டு சொல்கிறது.

கட்டுரையை முழுவதும் அலசி ஆராய்ந்து அது சுவாரஸ்யமானதா,வாசிக்க தக்கதா,இலக்கண ரீதியிலானதா என்பது உடப்ட ஐந்து அம்சங்களின் அடிப்படையில் அந்த கட்டுரையை மதிப்பிட்டு அதன் தரத்தை முன் வைக்கிறது.

ஒவ்வொரு அம்சத்தின் உட்கூறுகள் பற்றியும் விரிவான குறிப்புகளும் தரப்படுகிறது.

இணையம் மோசமான கட்டுரைகளால் நிறைந்திருப்பதால் நல்ல கட்டுரையை கண்டறிய இது போன்ற சீர் தூக்கி பார்க்கும் வழி அவசியம் என்று இந்த தளம் சொல்கிறது.

முகப்பு பக்கத்தில் பரிசோத‌னைக்கு உடப்ப‌டுத்த‌ப்பட்ட கட்டுரைகள் அவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.இணையத்தில் செய்திகளையும் கட்டுரைகளையும் விதவிதமாக பட்டியலிடும் தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.ஆனால் கட்டுரைகளின் வாசிப்பு தன்மையின் அடிப்படையில் இந்த பட்டியல் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.

இண்டெர்நெட்டில் மோசமாக எழுதப்பட்ட கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன என்பது உண்மை தான்.கூகுல் விளம்பரத்தின் மூலம் காசு பார்ப்பதற்காக என்றே அவசர கதியில் எழுதப்பட்ட‌ கட்டுரைகள் வேறு இருக்கின்றன.என‌வே நல்ல கட்டுரையாக தேடிப்பிடித்து படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் அவசியம் தான்.

அந்த வகையில் ஒரு கட்டுரை நல்ல கட்டுரை தானா என்று சரி பார்த்து சொல்லக்கூடிய இணைய சேவை சுவாரஸ்யமானது தான்.

ஆனால் சாப்ட்வேர் அலசல் மூலம் ஒரு கட்டுரையின் வாசிப்பு அனுபவத்தை மதிப்பிட்டுவிட முடியுமா?மனித மனதின் ரசனை நுட்பங்களை சாப்ட்வேர் அறியுமா என்ன? என்று கேட்கலாம்

அது மட்டும் அல்லாமல் சாப்ட்வேர் ஒரு கட்டுரையை அலசி ஆராய்ந்து அது 74 சதவீதம் வாசிப்பு தகுதி கொண்டது என்று சொல்லும் போது அதனை எப்படி புரிந்து கொள்வது?

இப்படி பல கேள்விகள் இருந்தாலும் கூட கட்டுரைகளின் வாசிப்பு தன்மையை சாப்ட்வேர் கொண்டு அலசி பார்ப்பது புதுமையான முயற்சி தான்.

சாப்ட்வேர் மூலம் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த உதவும் சேவைகள் வர்சியைல் ஒன்றாக இதனை கருதலாம்.ஏற்கனவே சாப்ட்வேர் மூலம் நீளமான கட்டுரைகளை முழுவதும் படிக்காமல் அத சாரம்சத்தை ஒரு சில வரிகளில் தெரிந்து கொள்ள உதவும் சம்மரைசர் தளமும் இருக்கிறது.அந்த வரிசையில் தான் இந்த தளம் சேர்ந்திருக்கிறது.

ஆய்வு மாணவர்கள்,எப்போதாவது படிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த சேவை உதவக்கூடும்.மற்றபடி வாசிப்பு தேர்ச்சி கொண்டவர்கள் ஒரு கட்டுரையை படிக்க துவங்கும் போதே அதனை தொடர்ந்து படிக்கலாமா அல்லது தூக்கி போட்டு விடலாமா என்று சுலபமாக முடிவுக்கு வந்து விடுவார்கள்.

இணையள முகவரி;http://the-article-checker.com/

4 responses to “கட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதள‌ம்.

    • அனைத்து பதிவுகளுக்கும் உடனுக்குடன் க‌ருத்து தெரிவிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

      அன்புடன் சிம்மன்

  1. நிச்சயமாக இது ஒரு பயனுள்ள தளமே…. ஒரு சிறிய வேண்டுகோள் : தயவு செய்து எழுத்துப் பிழைகளை திருத்திக் கொள்ளவும் எ.கா. மோசம் என்பதை போசம் என்று எழுதியுள்ளீர்கள். அனேகமாக இது அவசரகதியில் எழுதியதால் ஏற்பட்ட விளைவாக இருக்கக்கூடும் என நம்புகிறேன்….

பின்னூட்டமொன்றை இடுக