டிவிட்டரில் கருப்பு கொடி காட்டும் நரேந்திர மோடி

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்திருக்கிறார்.இதன் மூலம் தணிக்கைக்கு எதிரான டிவிட்டர் போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார்.

வடகிழக்கு மாநிலத்துவருக்கு எதிரான தாக்குதல் பீதியை உண்டாக்கிய வதந்திகளை பரப்பியதில் சமூக வலைப்பின்னல் தளங்களின் பக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து மத்திய அரசு 200 க்கும் மேற்பட்ட பக்கங்களை முடக்கியிருக்கிறது.

இது இணைய தணிக்கைக்கு சமம் என்னும் குரல்கள் ஒரு புறம் ஒலிக்க அரசோ துவேஷத்தை பரப்பும் பக்கங்கள் மட்டுமே கடுப்படுத்தப்படுவதாக விளக்கம் அளிக்கின்றது.ஆனால் இன்னொரு பக்கத்தில் பிரபல பத்திரிகையாளர்கள் இருவரின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பது அரசின் விளக்கத்தை கேள்விக்குறியக்கி உள்நோக்கம் பற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் டிவிட்டராளர்கள் அரசின் தணிக்கையை கண்டிக்கும் வகையில் ஜிஓஇபிலாக்ஸ் போன்ற ஹேஷ்டேகுகளை உருவாக்கி அதனுடன் தங்கள் விமர்சனத்தை குறும்பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

இப்போது குஜராத முதல்வர் நரேந்திர மோடியும் இதில் சேர்ந்திருக்கிறார்.ஒரு சாதாரண குடிமகனாக கருத்து சுதந்திரத்தின் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் தானும் இணைந்து கொள்வதாக கூறியுள்ள மோடி அந்த குறும்பதிவை ஜிஓஇபிலாக்ஸ் ஹேஷ்டேகுடன் வெளீயிட்டுள்ளார்.

அதோடு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் அறிமுக பக்கத்தில் உள்ள புகைப்பட பகுதியில் உள்ள படத்தை மாற்றி கருப்பு பட்டையை( இணைய உலகின் கருப்பு கொடி )இடம் பெற வைத்துள்ளார்.

மோடியின் டிவிட்டர் முகவரி;http://twitter.com/narendramodi

பின்னூட்டமொன்றை இடுக