உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்.

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இந்த தேடலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் உங்களை போல உள்ளவர்களை தேட வழி செய்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம்.

உங்களை போல உள்ளவர்கள் என்றால் உருவத்தில் உங்களைப்போலவே இருப்பவர்கள்.

ஒரே போன்ற தோற்றம் கொண்டவர்கள் உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கருத்து உண்டல்லவா?இது சரியா தவாறா தெரியாது,ஆனால் சில நேர நேரங்களில் ஒருவரை போலவே தோற்றம் தரக்கூடிய இன்னொருவரை நாமே பார்த்து வியந்திருப்போம்.ஏன் உங்களிடமே கூட யாரேனும் ஒருவர் உன்னைபோல ஒருவன் உண்டு என கூறியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் நம்மை போலவே ஒருவரை பார்க்க முடிவது கொஞ்சம் சுவாரஸ்யமனது தான்.

இந்த சுவாரஸ்யத்தை முழ்வீச்சில் அளிக்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம்.

இந்த தளத்தில் யார் தங்கள் புகைப்படத்தை சமர்பித்தாலும் அவரைப்போலவே தோற்றம் கொண்டுள்ள வேறொருவரை இந்த தளம் கண்டுபிடித்து தருகிறது.அப்படியே அவரது பேஸ்புக் பக்கத்தையும் முன் வைக்கிறது.அதன் பிறகு உருவ ஒற்றுமையை ரசித்து வியந்தபடி பேஸ்புக் மூலம் தொடர்பு கொள்லலாம்.இந்த இணைப்பை சக பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

புகைப்படத்தை வைத்து கொண்டு அதே போன்ற உருவ அமைப்பு உள்ளவர்களை தேடுவது எப்படி சாத்தியமாகிற்து என்ற வியப்பு ஏற்பட்டால்,பேசியல் ரிககனேஷன் என்று சொல்லப்படும் முக உணர்வு சாப்ட்வேர் உதவியோடு இந்த தளம் செயல்படுகிறது.

இந்த முக உணர்வு தொழில்நுட்பம் இப்போது இணையத்தில் பரப்ரப்பாக பேசப்படுகிறது.ஒருவரது முகலட்சனத்தின் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை கொண்டு அந்த முகத்தை உணரக்கூடிய இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பலவிதங்களில் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் பல சர்ச்சைகளும் இருக்கின்றன.

இதனிடையே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுவாரஸ்யமான சேவையாக மைன் பை பேஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.செல்போனில் பயன்படுத்தக்கூடிய செயலியும் இருக்கிறது.

நீங்களும் பயன்படுத்தி பார்த்தி இந்த தொழில்நுட்பம் சுவாரஸ்யமானதாக இருக்கிறதா,துல்லியமானதாக இருக்கிறதா என் சொல்லுங்கள்!.

இணையதள முகவரி;http://www.findbyface.com/#&slider1=1

5 responses to “உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்.

    • ஆம் இணையதளத்தின் முகப்பு பக்கம் தோன்ற மறுக்கிறது.ஏதோ சிக்கல் இருப்பதாக அறிகிறேன்.கூடுதல் விவரங்கள் தர முயல்கிறேன்.

      அன்புடன் சிம்மன்

  1. நல்ல பயன்னுள்ள தகவல்…… உங்கள் பகிர்வுக்கு நன்றி…..

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பின்னூட்டமொன்றை இடுக