720 மணி நேர படம் ;72 நிமிட டீசர் !

ambஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் பார்க்கலாம். டீசர் தானே , 3 அல்லது 4 நிமிடம் இருக்கும் என நீங்கள் சொல்வதற்கு முன், ஒரு சின்ன க்ளு – அது சற்று நீளமான டீசர். சரி ,பத்து அல்லது பதினைந்து நிமிடம் கொண்டதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் சாரி அதுவும் தவறு. அந்த டீசரின் அளவு எவ்வளவு தெரியுமா? 72 நிமிடம்!. அப்படி என்றால் அது டீசரே இல்லை முழு படம் என்கிறீர்களா? என்ன செய்ய மூலமாக உருவாகி கொண்டிருக்கும் முழு படத்தின் நீளம் தெரியுமா? 720 மணி நேரம். அதவாது தொடர்ந்து 30 நாட்கள் ஓடக்கூடிய படம் .

ஸ்வீடனைச்சேர்ந்த கலைஞரும் சோதனை முறையில் படங்களை இயக்குபவருமான ஆண்டர்ஸ் வெஸ்பர்க் ( Anders Weberg ) இந்த முழு நீ…ள படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் பெயர் ஆம்பியன்ஸ். படத்தை 2020 ம் ஆண்டில் எடுத்து முடிக்க உள்ளார். இதுவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடியோக்கள், இன்ஸ்டலேஷன், ஆடியோ என பல மீடியாக்களில் படைப்புகளை உருவாக்கி வரும் வெஸ்பர்க் இந்த படத்துடன் எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதன் 72 நிமிட முன்னோட்டத்தை விமியோ இணையதளத்தில் ஜூலை 20 வரை பார்க்கலாம். அடுத்ததாக 2016 ல் டிரெய்லர் வெளியாகும். அதன் நீளம் 7 மணி 20 நிமிடங்கள் . இது சின்ன டிரெய்லராம். 2018 ல் பெரிய டிரெய்லர் வெளியாகும், 72 மணி நேரத்திற்கு. பின்னர் இறுதியாக 2020 ல் 720 மணி நேர படம் ரிலீஸ். ஒண்டைம் ரிலீஸ் . உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பட்டு அதன் பிறகு படம் அழிகப்பட்டு விடுமாம், எப்படி!

வெஸ்பர்க் உண்மையிலேயே வித்தியாசமான கலைஞர். 2006 அவர் பி2பி ஆர்ட் எனும் பதத்தை உருவாக்கினார். அப்படி என்றால் அந்த கலைப்படைப்புகள் இணையத்தில் பி2பி என குறிப்பிடப்படும் வலைப்பின்னல்களில் மட்டுமே விநியோகிக்கப்படும். மூல படைப்பு முதலில் அதை படைத்த கலைஞரால் ஒரு இணையவாசியுடன் பகிரப்படும். பின்னர் அதை மற்ற இணையவாசிகள் டவுண்லோடு செய்து பார்க்கலாம். பகிரப்படும் வரை மட்டுமே அந்த படைப்பு இருக்கும். ஏனெனில் மூலப்படைப்பை பகிர்ந்து கொண்டவுடன் அழித்து விடுவார்கள். காப்புரிமை, விநியோகம் , வரவேற்பு எல்லாவற்றையும் தலை கீழாக பிரட்டிப்போடும் கருத்தாக்கம் இல்லையா?

வெஸ்பர்கின் இணையதளம்: http://www.thelongestfilm.com/

சரி ,இன்றைய தேதிக்கு உலகின் நீளமான படம் எது தெரியுமா? 240 மணி நேரம் ஒடக்கூடிய ’மாடர்ன் டைம்ஸ் பார் எவர்’- http://www.imdb.com/title/tt2659636/

—————
பி.கு; வலைப்பதிவு பயிற்சி பற்றிய புதிய பதிவு இங்கே; வலைப்பதிவி ஆர்வம் கொண்ட உங்கள் நண்பர்களுக்கு இந்த பயிற்சி பற்றி பரிந்துரைத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s