ஜிமெயிலில் புதிய வசதி.

இமெயில் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் புதிய வசதியை கூகுல் ஜிமெயிலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் மெயிலில் வரும் இணைப்புகளை கூகுல் டிரைவில் நேரடியாக சேமித்து கொள்ளலாம்.
பெரிய கோப்புகளை நிர்வகிக்க கூகுல் டிரைவில் சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது.ஆனால் இமெயில் வரும் கோப்புகளை கூகுல் டிரைவிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றால் முதலில் அவற்றை டெஸ்க்டாப்பில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் பிற்கு தான் டிரைவிற்கு மாற்ற முடியும்.

ஆனால் , இப்போது டெஸ்க்டாப்பிற்கு செல்லாமலே நேரடியாக இன்பாக்சில் இருந்தே ஒரே கிளிக்கில் கூகுல் டிரைவில் சேமித்து கொள்ளலாம். டிரைவில் எந்த கோப்பில் சேமிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

அது மட்டும் அல்ல சேமிக்கும் முன் வந்திருக்கும் கோப்பை முன்னோட்டம் பார்க்கும் வசதியும் இருக்கிறது. முன்னோட்டத்தை சிறிய வடிவிலும் பார்க்கலாம். முழு திரையாகவும் பார்க்கலாம். கோப்பை திறக்காமலே அதில் உள்ளவற்றை தேடியும் பார்க்கலாம்.

நேரடியாக டிரைவில் சேமித்து விடுவதால் வேண்டாத இமெயிலை உடனே டெலிட் செய்து விடலாம்.

மேக சேமிப்பு வசதியான கூகுல் டிரைவ் மற்றும் டிராப் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவது அதிகரித்திருக்கும் நிலையில் நேர்டையாக மெயிலில் இருந்து டிரைவ் சேவைக்கே சேமிக்க முடிவது நல்ல வசதி. டிராப் பாக்சிறகு இது போன்ற வசதி ஏற்கனவே உள்ளது.

———

கோப்புகளை நேரடியாக தரவிறக்கம் செய்ய.;https://cybersimman.wordpress.com/2013/07/01/download/
——

பி;கு : முந்தைய வடிவில் தவறுதலாக தகவல்கள் டெலிட ஆகிவிட்டன.மன்னிக்கவும்.

2 responses to “ஜிமெயிலில் புதிய வசதி.

பின்னூட்டமொன்றை இடுக